டிசம்பரில் ரஜினி படத்தின் இசை வெளியீட்டு விழா

1 mins read
6be3303c-f769-4453-9137-b7001697ae52
ரஜினி, விஷ்ணு விஷால். - படம்: ஊடகம்

ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் ‘லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பரில் நடக்க இருக்கிறது.

தனுஷ் நடித்த ‘3’, கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. அந்தப் படங்களை அடுத்து இவர் தற்பொழுது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கௌரவ வேடத்தில் ரஜினி நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, சென்னை, திருவண்ணாமலை உள்பட பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘லால் சலாம்’ படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதத்தில் இரண்டாவது வாரத்தில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்