மோகன் நடிக்கும் ‘ஹரா’ படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்த குஷ்புவுக்கு பதில் தற்பொழுது அனுமோல் ஒப்பந்தமாகி உள்ளார்.
ஒரு காலத்தில் வெள்ளி விழா படங்களாக கொடுத்தவர் மோகன். 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘ஹரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் மோகன் ஜோடியாக குஷ்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. மோகனும் குஷ்புவுடன் நடிக்கும் தனது கனவு நிறைவேறுவதாக மகிழ்சியுடன் கூறியிருந்தார்.
வெள்ளிவிழா நாயகனுடன் இணைவது அரிய வாய்ப்பு என்று குஷ்புவும் சொன்னார். ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை. மோகனுடன் குஷ்பு நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு பதில் மலையாள நடிகை அனுமோல் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

