தென்னிந்திய திரையுலகிற்கு வரும் ஸ்ரீதேவியின் மகள்

1 mins read
e8bb652f-7181-401f-9328-41bc6017c685
ஜான்வி கபூர். - படம்: ஊடகம்
multi-img1 of 2

காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

80களின் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் ‘தடாக்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் கோஸ்ட் ஸ்டோரி, குஞ்சன் சக்சேனா, மிலி ஆகிய படங்களில் நடித்தார்.

தற்பொழுது ‘தேவரா’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் தென்னிந்திய திரைக்குள் வந்திருக்கிறார். இந்தப் படத்தில் ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படம் இது. இந்தப் படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார், சைப் அலிகான் வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் ஜான்வி கபூர் படத்தில் தோன்றும் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். அதில் அவர் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளனர். அவரின் தோற்றத்தைப் பார்த்து பாராட்டி வரும் வலைத்தளவாசிகள் ஒரு கோணத்தில் அவர் ஸ்ரீதேவியை நினைவூட்டுவதாக கூறி வருகிறார்கள். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி வெளிவருவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்