தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

100 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ‘காவாலா’ அசல் காணொளி

1 mins read
a57580f8-da21-4b78-a971-741dc50d410f
‘காவாலா’ பாடலில் ரஜினி, தமன்னா. - படம்: ஊடகம்

‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் இணையத்தில் நூறு மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் வசூலில் அசத்தியது.

அதில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடலுக்கு தமன்னா கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது.

இப்பாடலுக்கான வரிகளுடன் வெளியான காணொளி, யூடியூப் தளத்தில் மட்டும் 215 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

தற்போது அப்பாடலின் அசல் காணொளி 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. பாடல் வெளியான ஒரு மாதத்திற்குள் இப்பாடல் சாதனை படைத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

‘ஜெயிலர்’ படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததில் ‘காவாலா’ பாடலுக்கு முக்கியப் பங்குண்டு.

எனினும், இப்பாடலில் தமன்னா அளவுக்கு அதிகமான கவர்ச்சியை வெளிப்படுத்தியதாக சிலர் விமர்சித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்