மும்பையில் வீடு வாங்கிய அக்‌ஷரா

மும்பையில் வீடு வாங்கிய அக்‌ஷரா

படம்: ஊடகம்

04 Nov 2023 - 2:49 pm

1 mins read

கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன் மும்பையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு வாங்கியுள்ளார். அவர் மேலும் பல சொத்துகளை வாங்க வேண்டும் என கமல் வாழ்த்தி உள்ளார்.

கமலின் மகள்களான ஷ்ருதியும் அக்‌ஷராவும் முப்பது வயதைக் கடந்துவிட்டாலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருவருமே மும்பையில் தனித்தனியாக வசிக்கின்றனர்.

சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அக்‌ஷரா வேறு துறைகளிலும் ஈடுபட்டு சம்பாதிக்கிறார். அந்த வகையில் தனது வருமானத்தைக் கொண்டு மும்பையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் சொகுசு வீடு வாங்கியுள்ளார். அந்த வீட்டுக்கான பதிவுத்தொகையாக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலுத்தியுள்ளதாகவும் தகவல்.

விஜய் ஆண்டனியுடன் அக்‌ஷரா நடித்து முடித்துள்ள ‘அக்னி சிறகுகள்’ படம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்