நவம்பரில் வெளியாகும் ‘காதல் தி கோர்’

நவம்பரில் வெளியாகும் ‘காதல் தி கோர்’

1 mins read
36c985d2-168b-4c54-bc77-da11b719ba02
ஜோதிகா. - படம்: ஊடகம்

மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ள ‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படம் திரைகாண்பது உற்சாகம் அளிப்பதாக கூறியுள்ளார் நடிகை ஜோதிகா.

நவம்பர் 23ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை மம்முட்டியின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமே ‘காதல் தி கோர்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதையடுத்து டிசம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்