செம்பு முருகன் கோவிலில் வழிபட்ட பிரியா பவானி சங்கர்

செம்பு முருகன் கோவிலில் வழிபட்ட பிரியா பவானி சங்கர்

1 mins read
2acffba3-8d28-4884-a2c5-6302d93019f1
பிரியா பவானி சங்கர். - படம்: ஊடகம்

கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர்.

பழனிக்கு அருகே ராமலிங்கம்பட்டி கிராமத்தில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவில் திரையுலகத்தினர் மத்தியில் மிகவும் பிரபலம்.

முன்னணி நாயகர்கள் சிலர் இங்கு அடிக்கடி வந்து முருகனை வழிபட்டு செல்வார்களாம்.

அந்த வரிசையில் பிரியா பவானி சங்கரும் அண்மையில் தரிசனம் செய்துள்ளார்.

இக்கோவிலின் கருவறை பூமிக்கடியில் 16 அடி ஆழத்தில் அமைந்திருப்பதுதான் சிறப்பு. கருவறையில் செம்பு உலோகத்திலான முருகன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.

குறிப்புச் சொற்கள்