தனி நாயகியாக நடிப்பதில் கவனம் செலுத்துகிறார் ஹன்சிகா.
இவரது நடிப்பில் ‘கார்டியன்’ என்ற தலைப்பில் உருவாகி உள்ள படத்துக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், மேலும் இரண்டு பேய் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.
தற்போது ‘105 மினிட்ஸ்’, ‘மை நேம் ஸ்ருதி’, ‘ரவுடி பேபி’, ‘மேன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. இவை அனைத்துமே நாயகியை முன்னிலைப்படுத்தும் கதைகளைக் கொண்டு உருவாகும் படம்.
திருமணத்துக்குப் பிறகும் தனக்குரிய வாய்ப்புகள் தேடி வருவது மனநிறைவை அளிப்பதாகக் கூறும் ஹன்சிகாவின் நடிப்பில் அண்மையில் ‘பார்ட்னர்’ படம் வெளியானது.
முன்னதாக, மலேசிய நடிகர் முகேன் ராவுடன் இணைந்து ‘மை3’ என்ற இணையத் தொடரிலும் நடித்திருந்தார் ஹன்சிகா.

