‘நல்ல படைப்புகளை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும்’

‘நல்ல படைப்புகளை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும்’

1 mins read
0946a9d2-9b00-4d8e-ac56-c56613e69b99
‘ரெய்டு’ படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இயக்குநர் முத்தையாவுக்காகத்தான் ‘ரெய்டு’ திரைப்படத்தில் தாம் நடித்ததாக நடிகை ஸ்ரீதிவ்யா தெரிவித்துள்ளார்.

வரும் 10ஆம் தேதி திரைகாண உள்ள இப்படத்தின் விளம்பர நிகழ்வில் பேசிய அவர், விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளித்ததாக குறிப்பிட்டார்.

“இதற்கு முன்பு ‘மருது’ படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரத்தைக் கொடுத்திருந்தார் முத்தையா. அதற்காக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

“இதுபோன்ற தரமான படைப்புகளையும் இயக்குநர்களையும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும்,” என்றார் ஸ்ரீதிவ்யா.

அடுத்து பேசிய விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா மிகத் திறமையான நடிகை என்றும் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரைச் சந்தித்ததாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்