மீண்டும் காவல் அதிகாரியாக காஜல் அகர்வால்

1 mins read
fae1c80a-c6c8-4d87-9dfc-36ca6045a1d6
காஜல். - படம்: ஊடகம்

தெலுங்குப் படம் ஒன்றில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். படத்தின் பெயர் ‘சத்தியபாமா’.

சுமன் சிக்கலா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி ‘சத்தியபாமா’ படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புடன் காஜல் அகர்வால் காவல்துறைக்கான சீருடையுடன் மிடுக்காகக் காட்சியளிக்கும் புகைப்படங்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கெனவே விஜய்யுடன் இணைந்து நடித்த படத்தில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தை காஜல் ஏற்றிருந்தார்.

இதற்கிடையே ‘உமா’ என்ற இந்திப் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம் காஜல். அப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

தெலுங்கில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுடன் இவர் இணைந்து நடித்துள்ள ‘பகவந்த் கேசரி’ என்ற படம் கடந்த மாதம் வெளியீடு கண்ட நிலையில், தற்போது கமல்ஹாசனுடன் ‘இந்தியன் -2’ படத்தில் நடித்து வருகிறார் காஜல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்