திருமணம் செய்துகொண்ட அமலா: படத்தைப் பகிர்ந்த காதலர்

திருமணம் செய்துகொண்ட அமலா: படத்தைப் பகிர்ந்த காதலர்

1 mins read
0cc3ba10-a8de-480c-b96f-d8f599afb3a5
அமலாவின் காதலர் வெளியிட்ட படம். - படம்: ஊடகம்

நடிகை அமலா பால் அவரது காதலரை மணந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அமலா பாலை தாம் மனதாரக் காதலிப்பதாகவும் தனது காதலை ஏற்றுக்கொள்ளும் படியும் கோரிக்கை விடுத்து காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார் அமலாவின் காதலர் ஜெகத் தேசாய்.

அமலாவின் பிறந்தநாளன்று இந்தக் காணொளியை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, அவரது காதலை தாம் ஏற்றுக்கொண்டதாக இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் அமலா பால்.

இந்நிலையில், ஜெகத் தேசாய், அமலா பால் திருமணம் எந்தவித ஆரவாரமும் இன்றி எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.

இது தொடர்பான புகைப் படத்தை வெளியிட்டுள்ள ஜெகத் தேசாய், “இரண்டு ஆன்மாக்கள், ஒரு விதி, இந்த வாழ்நாள் முழுவதும் என் தெய்வீகப் பெண்ணுடன் கைகோத்து நடப்பேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்