தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’

1 mins read
f4c7df97-bd92-4efe-8cc8-b19447c690c7
கமல், திரிஷா. - படம்: ஊடகம்

கமல்ஹாசனின் அடுத்த படத்தை மணிரத்னம் இயக்குவது உறுதியாகி உள்ளது.

இருவரும் ஏறக்குறைய 37 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து பணியாற்றுகின்றனர். புதுப் படத்துக்கு ‘தக் லைஃப்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார். மேலும், மலையாள நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஏற்கெனவே கமலுடன் ‘மன்மதன் அம்பு’, ‘தூங்காவனம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் திரிஷா.

கமல், மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படம் பெரும் பொருட்செலவில் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், இதில் இணைய உள்ள மற்ற கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்