மடோனா: நான் நடித்துள்ள படத்தின் தலைப்பை ரசிகர்களே தேர்வுசெய்யலாம்

1 mins read
fe9700a8-aaf9-498b-a3b3-850001a7cd0a
மடோனா செபாஸ்டியன். - படம்: ஊடகம்

‘லியோ’ படத்தையடுத்து மடோனா செபாஸ்டியனுக்கு தமிழில் நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றன. தற்போது மூன்று தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

‘லியோ’ படப்பிடிப்பு முடிந்த கையோடு பிரபுதேவா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இப்படத்தில் யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி. மகேந்திரன், ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“இப்படத்தின் தலைப்பை ரசிகர்களே வைக்கலாம். அவர்கள் குறிப்பிடும் பல தலைப்புகளில் இருந்து பொருத்தமான ஒன்றை இயக்குநர் தேர்வு செய்வார்.

“படப்பிடிப்பின்போது பிரபுதேவாவின் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் அருகில் இருந்து பார்த்து வியந்தேன். தமிழில் மீண்டும் கதாநாயகியாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

“விஜய் படத்தில் அதிரடி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது அரிது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டேன்,” என்கிறார் மடோனா செபாஸ்டியன்.

அந்த வகையில் மடோனாவும் தன் சம்பளத்தை உயர்த்தி உள்ளார். எனினும், ஒரேயடியாக உயர்த்தாமல், அடக்கி வாசித்துள்ளாராம்.

இதையடுத்து, அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அவரைப் பாராட்டி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்