தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கமலை நேரில் சந்தித்த விஜய்

1 mins read
458007b7-2262-41d0-8560-bd0cbb15711d
கமல்ஹாசனை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் விஜய். - படம்: சமூக ஊடகம்

‘உலக நாயகன்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் கமல் ஹாசன் தனது 69வது பிறந்தநாளை நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடினார்.

இயக்குநர் சங்கர், அட்லி, விக்னே‌ஷ் சிவன், நடிகர் மம்மூட்டி, துல்கர் சல்மான், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி திரை உலக நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் கமலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்

கமலும் தமது நெருக்கமான திரையுலக நண்பர்களுக்கு ஒரு மாபெரும் விருந்து கொடுத்ததாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் கமல்ஹாசனை நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் நேரில் சென்று தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அது குறித்த புகைப்படம் ஒன்றும் சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

இந்தியன்-2, கல்கி 2898 ஏடி, தக் லைப், இயக்குநர் எச்.வினோத் இயக்கும் படம் என அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்து வருகிறார் கமல்.

இதற்கு இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்