‘பாகமதி’ இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா

‘பாகமதி’ இரண்டாம் பாகத்தில் அனுஷ்கா

1 mins read
7d36d789-91cf-4cbe-a60e-fe96b9899e6d
அனுஷ்கா. - படம்: ஊடகம்

மீண்டும் நடிக்கத் தொடங்கி உள்ளார் அனுஷ்கா. இவரது ஐம்பதாவது படமாக ‘பாகமதி 2’ உருவாகிறது. இதற்காக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2017ல் வெளிவந்த ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் ‘பாகமதி’, ‘சைலன்ஸ்’, ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ ஆகிய மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார் அனுஷ்கா. தற்போது ‘கதனர்’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடினார் அனுஷ்கா. இந்நிலையில் சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் நடிக்கக் கேட்டு அப்படத்தின் தயாரிப்புத் தரப்பு. எனினும், பாகமதி இரண்டாம் பாகத்தில் நடிப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறாராம் அனுஷ்கா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்