தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரே ஆண்டில் நான்கு படங்கள்

1 mins read
ad501cce-37b0-4f3e-8880-935cc63113ea
ஹன்சிகா மோத்வானி. - படம்: ஊடகம்

ஹன்சிகா நடித்துள்ள தெலுங்குப் படமான ‘மை நேம் இஸ் ஸ்ருதி’ விரைவில் திரைகாண உள்ளது. மேலும், தமிழில் அவர் நடித்துள்ள ‘கார்டியன்’ படம் அடுத்து வெளிவருகிறது.

இவை தவிர, தெலுங்கில் ‘105 நிமிடங்கள்’, தமிழில் ‘மேன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. இவையும் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது.

“எதிர்வரும் ஆங்கிலப் புத்தாண்டில் நான் நடித்துள்ள இந்த நான்கு படங்களும் வெளியாவது உறுதி. மேலும் சில புதிய படங்களில் நடிக்க வாய்ப்புள்ளது,” என்கிறார் ஹன்சிகா.

இது சாத்தியமாகும் பட்சத்தில் அடுத்த ஆண்டு அதிக படங்களில் நடித்த கதாநாயகி என்ற பெருமை இவருக்குக் கிடைக்கக்கூடும்.

இதற்கு ரசிகர்களின் ஆதரவே முதன்மைக் காரணமாக இருக்கும் என்கிறார் ஹன்சிகா. தற்போது இணையத்தொடர்களிலும் இவர் கவனம் செலுத்தி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்