ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய இணையத் தொடர் நவம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. ‘தி வில்லேஜ்’ என்கிற தலைப்பில் மிலிந்த்ராவ் இயக்கி உள்ள இத்தொடரில் திவ்யா பிள்ளை, அலியா, ‘ஆடுகளம்’ நரேன், பூஜா, ஜான் கோக்கன், ஜெயபிரகாஷ், ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆபத்தில் சிக்கும் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ஒரு சாகசப் பயணத்தை மேற்கொள்ளும் இளைஞனின் கதையாம் இது. முழுக்க முழுக்க கற்பனையும் வீரமும் நிறைந்த கதையைப் படமாக்கி உள்ளார் மிலிந்த்ராவ்.
தமிழில் மட்டும் அல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ஒருசேர வெளியாகிறது இந்த இணையத்தொடர்.

