‘தேவையற்ற படுக்கை அறைக் காட்சி’

‘தேவையற்ற படுக்கை அறைக் காட்சி’

1 mins read
d32c7fbb-6abb-4529-a99c-57fc00631971
வாணி போஜன். - படம்: ஊடகம்

பணத்தைவிட தாம் நடிக்கும் கதாபாத்திரங்கள் தான் முக்கியம் என்கிறார் நடிகை வாணி போஜன்.

பணம் கிடைக்கும் என்பதற்காக கவர்ச்சியாக நடிக்க தம்மால் இயலாது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சில படங்களில் தேவையின்றி படுக்கை அறைக் காட்சிகளை வைக்கிறார்கள். கதைப்படி அந்தக் காட்சி தேவையே இல்லை. இவ்வாறு ஒரு முறை நடந்தபோது படத்தின் இயக்குநரிடம் கேள்வி எழுப்பினேன். அதன் பின் அவர் அந்தக் காட்சியை எடுக்கவில்லை.

“நடிப்பு என்று வரும்போது நாம் ஏற்கும் கதாபாத்திரம் தான் முக்கியம். அக்கதாபாத்திரமும் கதைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன்,” என்று அண்மையில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் வாணி போஜன்.

குறிப்புச் சொற்கள்