முன்பெல்லாம் திரையுலகம் குறித்துப் பேசும்போது, எந்த நடிகர் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்படும். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
நடிகைகளும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். மேலும், சம்பாதித்த பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்து, வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள்.
[ο]ஜஸ்வர்யா ராயைப் பொறுத்தவரை பெரிய இயக்குநர்களின், பெரிய நிறுவனங்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்பதில் தீர்மானமாக இருக்கிறார்.
இவரது சொத்து மதிப்பு சுமார் 828 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
[ο]நடிகை பிரியங்கா சோப்ராவை ஹாலிவுட் ரசிகர்கள் நன்கு அறிவர். இந்திப் படங் களில் ஓரளவு கவர்ச்சியாக நடித்து வந்தவர், ஹாலிவுட்டுக்குச் சென்றதும் கவர்ச்சியின் எல்லைக்கே போய்விட்டார்.
ஆங்கிலப் படங்கள் மட்டும் அல்லாமல் பெரும் பொருள் செலவில் உருவாகும் இணையத் தொடர்களிலும் நடிக்கிறார் பிரியங்கா.
[ο]பணக்கார நடிகைகளின் பட்டியலில் தீபிகா படுகோனுக்கும் இடமுண்டு. இவர் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து வசூலைக் குவித்து வருகின்றன. திரைப்படம் மட்டும் அல்லாமல் விளம்பரங்களிலும் நடித்து காசு பார்த்து வருகிறார்.
மிகக் குறுகிய காலத்தில் தீபிகாவின் சொத்து மதிப்பு 400 கோடி ரூபாயை கடந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
[ο]அண்மையில் திருமணம் செய்து கொண்ட ஆலியாபட்டின் சொத்து மதிப்பு ரூ.557 கோடி என இந்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மற்ற நடிகைகளைவிட ஆலியாதான் விளம்பரங்கள் மூலமாகவும் அதிக பணம் சம்பாதிக்கிறார்.
[ο]கத்ரீனா கைஃப் நடிகையாக மட்டும் அல்லாமல் விளம்பர மாடலாகவும் அசத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.250 கோடியைக் கடந்துவிட்டது என்கிறார்கள். ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருந்தாலும், பல இயக்குநர்கள் முற்றுகையிட்டாலும் மனதிற்குப் பிடித்தமான படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார் கத்ரீனா.
[ο]தென்னிந்திய நடிகைகளும் இவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. நயன்தாரா, திரிஷா, ராஷ்மிகா, ஹன்சிகா, அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகள் ஒப்பீட்டளவில் இந்தி நடிகைகளைவிட குறைவாகத்தான் ஊதியம் பெறுகிறார்கள். எனினும் பணத்தை முதலீடு செய்வதில் கெட்டிக்காரர்களாக உள்ளனர்.
நயன்தாரா பல்வேறு தொழில்களில் பணத்தை முதலீடு செய்து உள்ளார். மேலும், திரைப்பட விநியோகிப்பாளராகவும் உள்ளார். நகைக் கடை, அழகு நிலையங்கள், வீட்டு மனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணி நாயகிகள் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர்.
இவ்விஷயத்தில் மற்ற நடிகைகளுக்கு நயன்தாரா முன் மாதிரியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
திரைத்துறை சார்ந்த முதலீடுகளை தனது கணவர் விக்னேஷ் சிவனின் பொறுப்பில் விட்டுவிட்டாராம். விக்னேஷும் கச்சிதமான முதலீட்டு முடிவுகளை எடுப்பதால் எல்லாம் லாபகரமாக அமைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
திரிஷாவைப் பொறுத்தவரை, சில ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதுமே சுதாரித்துக்கொண்டார். அந்தச் சமயத்தில் பொறுப்புடனும் மிகுந்த நிதானத்துடன் அவர் எடுத்த சில முதலீட்டு முடிவுகள் இப்போது அவருக்கு கைகொடுக்கின்றன.
முதலீட்டு விவகாரங்களில் அவர் நடிகை அனுஷ்காவைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது. இருவருமே இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். திரையுலகில் இதுவே இறுதிச்சுற்று என்பதை நன்கு அறிந்துள்ளதால், வருமானத்தை மனதிற்கொண்டு செயல்படுவார்கள் எனத் தெரிகிறது.
தென்னிந்திய நடிகைகள் பெரிய முதலீடுகளாக அல்லாமல் சிறு நிறுவனங்களைத் தொடங்கி வருமானத்துக்குத் திட்டமிடுவதைப் பாதுகாப்பாகக் கருதுகின்றனராம்.

