தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வசூலில் சாதனை புரிந்து வரும் ‘லியோ’

1 mins read
c6ce0e95-7232-4c65-90eb-ea1d6d668fa8
‘லியோ’ படத்தில் விஜய். - படம்: ஊடகம்

விஜய் நடித்துள்ள ‘லியோ’ தொடர்ந்து பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது.

இப்படம் வெளியீடு கண்ட முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்தது. மேலும், உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், வெளிநாடுகளில் மட்டும் ‘லியோ’ திரைப்படம் ரூ. 201 கோடி வசூலித்துள்ளதாக அதன் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்