ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசு கொடுத்த சூர்யா

1 mins read
2b5cc46d-b5d9-45e6-a7ab-22e5cc3b4a57
சூர்யா. - படம்: ஊடகம்

தீபாவளிப் பரிசாக சூர்யா தான் நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் முதல் சுவரொட்டியை வெளியிட்டு இருக்கிறார்.

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

3டி முறையில் சரித்திரப் படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் சுவரொட்டியை அண்மையில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ‘கங்குவா’ படத்தின் புதிய சுவரொட்டியை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த சுவரொட்டியில் நடிகர் சூர்யா கையில் நெருப்புடன் நிற்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்