‘டெஸ்ட்’ சுவரொட்டியை வெளியிட்ட நயன்தாரா

1 mins read
e6821854-bf94-48a6-9b4f-d0c155e95ab1
‘டெஸ்ட்’ சுவரொட்டி. - படம்: ஊடகம்

‘டெஸ்ட்’ படத்தில் நயன்தாராவுடன் நடிகர்கள் மாதவன், சித்தார்த் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஒய்நாட் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ‘மண்டேலா’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான சஷிகாந்த் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சிகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா ‘டெஸ்ட்’ படக்குழுவுக்கு தீபாவளி வாழ்த்துகளை ‘எக்ஸ்’ பக்கத்தில் தெரிவித்து படத்தின் முதல் சுவரொட்டியை வெளியிட்டு இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி