விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் கொட்டேஷன் கேங் படத்தில் தனி நாயகியாக நடித்துள்ளார் பிரியாமணி.
இது பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படையை மையமாக வைத்து உருவாகும் படம் எனக் கூறப்படுகிறது.
குடும்பச் சூழ்நிலை காரணமாக குண்டர் கும்பலில் சேர்ந்து அதற்கு தலைவியாகவும் மாறுகிறார் நாயகி. ஆணாதிக்கம் நிறைந்த குண்டர் கும்பல்களுடன் அவர் எப்படி மோதுகிறார், வெற்றி பெறுகிறார் என்பதுதான் கதையாம். பல சண்டை காட்சிகளிலும் பிரியாமணி நடித்துள்ளார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜாக்கி ஷெராப் வில்லனாக நடித்துள்ளார். ‘டிரம்ஸ்’ சிவமணி இசை அமைக்கிறார்.

