தென்னிந்திய மொழிகளில் தயாராகும் திரைப்படங்களுக்கு இந்திய அளவில் வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறார் ஹன்சிகா.
இதன் மூலம் தென்னிந்தியாவில் ஏராளமான திறமை வாய்ந்த கலைஞர்கள் இருப்பது உறுதியாகி உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் ரசிகர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கக் கூடியவர்கள். இந்த ஆதரவுதான் எனக்கு ஊக்கமளிக்கிறது. இந்த ஊக்கமே என்னை என்றும் இளமையாக வைத்திருக்கும். இதுதான் எனது அழகின் ரகசியம்,” என்கிறார் ஹன்சிகா.

