எதிர்மறைக் கதாபாத்திரத்தில் விஜய்

1 mins read
e539f7ab-d7a9-4b03-9098-d80165b3543b
விஜய், வெங்கட் பிரபு. - படம்: ஊடகம்

‘லியோ’ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் விஜய் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்தி வெளியாகி இருக்கிறது.

விஜய் நடிக்கும் 68வது படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு கார் சண்டைக்காட்சியில் நடித்து முடித்துவிட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பினார் விஜய்.

இந்தப் படத்தில் விஜய், அப்பா- மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு வேடத்தில் விஜய் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்