தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சலார்’ படத்தின் புதிய அறிவிப்பு

1 mins read
2583100f-9dd3-4cf2-aa43-07f191892e05
பிரபாஸ். - படம்: ஊடகம்

‘சலார்’ படத்தின் முன்னோட்டக் காட்சி டிசம்பரில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இந்தப் படத்தில் ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். ‘சலார்’ திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘சலார்’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி டிசம்பர் 1ஆம் தேதி இரவு 7.19 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்