தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தமன்னா வீட்டில் தொடர்ந்து தொல்லை

திருமணத்துக்கு தயாரான தமன்னா

2 mins read
970d5cc8-9c31-4af6-b407-2c63642ab341
தமன்னா. - படம்: ஊடகம்

புது ஆண்டு கொண்டாட்டத்தின்போது தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்திய தமன்னா, வீட்டாரின் தொந்தரவினால் தனது காதலரைத் திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்.

தமன்னாவும் விஜய் வர்மாவும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஆண்டு தொடக்கத்தில் இருவரும் தங்களுடைய உறவை உறுதிப்படுத்தினர்.

இருவரும் ஏற்கெனவே 30 வயதைக் கடந்தவர்கள். நீண்ட நாள்களாக காதலர்களாக இருந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதே நல்லது என குடும்பத்தினர் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் தமன்னாவும் விஜய் வர்மாவும் வரும் டிசம்பரில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. வடக்கிலிருந்து வந்த தமன்னா ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக இருந்தார். விஜய் வர்மா ஹைதராபாத்தில் பிறந்து, பாலிவுட் சென்றவர்.

ஆரம்பத்தில் இருவரும் உறவில் இருப்பதைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். முதன்முறையாக இருவரும் கோவாவில் புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் நண்பர்களானார்கள்.

அதன் பிறகு எங்குச் சென்றாலும் இருவரும் ஜோடியாகவே சென்று வந்தனர். உச்ச கட்டமாக ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற திரைப்படத்தில் இருவரும் கடலில் மிதக்கும் கப்பல், நடுக்காட்டில் நிற்கும் கார் என ஓர் இடம் விடாமல் அனைத்து இடத்திலும் முத்தக் காட்சிகளில் நடித்து அதிர வைத்திருந்தனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான் நடிகர் விஜய் வர்மாவுடன் நெருக்கமாகி இருக்கிறார் நடிகை தமன்னா. அதன்பிறகு அவருடனான அந்த நெருக்கம் நட்பாகி, காதலாக மலர்ந்திருக்கிறது.

இரு வீட்டாரிடமிருந்தும் திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தமன்னா தனது பிறந்தநாளான டிசம்பர் 21ஆம் தேதியன்று தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

தமன்னா ஷிஷீடோ என்ற ஜப்பான் நிறுவனத்தின் அழகு சாதன பொருள்களுக்கு இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் இந்திய தூதர் தமன்னாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்