‘இந்நாளின் திரை உலக நடிகவேள்’

1 mins read
75818029-5ca2-4b59-872f-f92ce294c842
‘ஜிகர்தண்டா 2’ படக் குழுவினருடன் ரஜினிகாந்த். - படம்: ஊடகம்

எஸ்.ஜே.சூர்யாவுக்கு தற்போது 55 வயது ஆகும் நிலையில், திருமணம் செய்து கொள்ளாமலே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பல படங்களை இயக்கி அவை அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. தற்பொழுது இவர் இயக்குவதை விட்டுவிட்டு நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் நடித்து தீபாவளிக்கு வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் அவரின் நடிப்பைப் பார்த்து “எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார்,” என்று ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார். தற்பொழுது ஒரு படத்திற்கு மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார் எஸ்.ஜே.சூர்யா.

குறிப்புச் சொற்கள்