அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து அவர் கழட்டிவிடப்பட்டார். பின்னர் விக்னேஷ் சிவனின் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் எடுக்கப்போவதாக அறிவித்து இருந்தது. ஆனால் லவ் டுடே படத்தின் இயக்குநரும் நடிகருமான பிரதீப் தன்னுடைய சம்பளத்தை 20 கோடி ரூபாய்க்கு ஏற்றியதால் ராஜ்கமல் நிறுவனம் படத்தை தயாரிப்பதில் இருந்து விலகியது. தொடர் விலகல்களால் விக்னேஷ் சிவன் நொந்து போய் இருந்த வேளையில் தற்பொழுது லியோ படத்தைத் தயாரித்த லலித்குமார் இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின் நடிக்கின்றனர். ஒரே படத்தில் மூன்று இயக்குநர்களை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் படம் இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் விலகலால் நொந்துபோன விக்னேஷ் சிவன்
1 mins read
விக்னேஷ் சிவன். - படம்: ஊடகம்
குறிப்புச் சொற்கள்

