பார்த்திபன் படத்தில் பாடகி ஸ்ரேயா கோஷல்!

பார்த்திபன் படத்தில் பாடகி ஸ்ரேயா கோஷல்!

1 mins read
f065df7d-3fd9-4f03-9238-13d1fb0329e1
ஸ்ரேயா கோஷல். - படம்: ஊடகம்

‘இரவின் நிழல்’ படத்தை அடுத்து தனது அடுத்த படத்தை இயக்கும் ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் பார்த்திபன்.

டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை ஏற்கெனவே ஸ்ருதிஹாசன் பாடிய நிலையில், தற்போது ஸ்ரேயா கோஷலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இதுகுறித்த தகவலை ‘எக்ஸ்’ பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார் பார்த்திபன்.

இதற்கு முன்பு பார்த்திபன் இயக்கிய ‘இரவின் நிழல்’ படத்தில் ‘மாயவா தூயவா’ என்றொரு பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடி, தேசிய விருது பெற்றார் ஸ்ரேயா கோஷல்.

இந்த நிலையில் மீண்டும் பார்த்திபன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் டி.இமான் இசையில் அவர் ஒரு பாடல் பாடி இருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி