மாறுபட்ட கதாபாத்திரத்தில் சாண்டி

மாறுபட்ட கதாபாத்திரத்தில் சாண்டி

1 mins read
791bb719-3a28-40a2-a7dc-12f500af02e2
சாண்டி. - படம்: ஊடகம்

நடன இயக்குநர் சாண்டிக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அண்மையில் லியோ படத்தில் நடித்த அவர், இப்போது ‘ரோசி’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

ஒரே சமயத்தில் தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஷூன்யா இயக்குகிறார். குருகிரண் இசையமைத்துள்ளார்.

இதில் ஆண்டாள் என்ற கதாபாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க உள்ளார் சாண்டி.

இப்படத்தின் கன்னட மொழி சுவரொட்டியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். தமிழ்ப் பதிப்புக்கான சுவரொட்டியை பா. ரஞ்சித் வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்