அதிதி சங்கரிடம் விளக்கம் அளிக்கக் கோரும் ரசிகர்கள்

அதிதி சங்கரிடம் விளக்கம் அளிக்கக் கோரும் ரசிகர்கள்

1 mins read
e9645fc3-80e5-47de-b40b-9243b8931379
அதிதி சங்கர். - படம்: ஊடகம்

மருத்துவருக்கான உடையுடன் தாம் காட்சியளிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை அதிதி சங்கர்.

‘டாக்டர் ஏ’ என்றும் அப்படத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் சங்கரின் மகளான அதிதி மருத்துவப் படிப்பை முடித்தவர். எனினும், மருத்துவத் தொழிலில் ஈடுபடாமல் திரைத்துறை மீதான ஆர்வத்தால் நடிகையாகிவிட்டார்.

இந்நிலையில். இன்ஸ்டகிராமில் மருத்துவராகத் தோற்றமளிக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து, அவர் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவராகச் சேவையாற்ற உள்ளதாகவும் ஒரு தகவல் பரவியுள்ளது.

இது உண்மையா என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே, கடைசியாக தாம் ஒப்புக்கொண்ட இரண்டு படங்களில் விரைவாக நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளாராம் அதிதி. பிறகு மேற்படிப்பில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. அதிதி இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்