அஜித்துக்கு கதை தயார் என்கிறார் அட்லி

1 mins read
71883c2b-84c6-47fb-a461-af825ac70c1d
அஜித். - படம்: ஊடகம்

அஜித்திற்கு ஏற்ற ஒரு கதையை தான் உருவாக்கி இருப்பதாக இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார்.

‘ராஜா ராணி’ படத்தை இயக்கி முடித்த பின்னர் நடிகை நயன்தாரா மூலம் அஜித்திடம் கதை சொல்ல முயன்றதாகவும் அண்மைய பேட்டியில் அட்லி குறிப்பிட்டுள்ளார்.

“அந்த சமயத்தில் நான் பள்ளி மாணவன் போல் இருப்பதாக அஜித் ஜாலியாகக் கிண்டல் செய்தார். அவருக்காக உருவாக்கியுள்ள கதை பயங்கரமானதாக இருக்கும். அவர் சம்மதித்தால் உடனடியாக அதை படமாக்க நான் தயார்,” என்று அட்லி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்