ரஜினி வருகையால் உற்சாகம் அடைந்த கங்கனா

ரஜினி வருகையால் உற்சாகம் அடைந்த கங்கனா

1 mins read
b5f0abfa-d695-4834-ab33-2e855d28f0f0
கங்கனாவை சந்தித்த ரஜினி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ரஜினி மிக எளிமையானவர் என்று பாராட்டுகிறார் நடிகை கங்கனா ரணாவத்.

தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில், நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது மனோதத்துவம், திகில், மர்மங்கள் நிறைந்த படமாக உருவாகிறது.

ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இப்படம் சென்னையில் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு திடிரென வருகை தந்துள்ளார் ரஜினி. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் கங்கனா.

மேலும், “இது மிக மிக அற்புதமான தருணம். எங்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தார் ரஜினி. அனைவரிடமும் மிக இயல்பாக பேசினார். அவரது எளிமையும் அன்பும் நெகிழ வைத்தது,” எனப் பதிவிட்டுள்ளார் கங்கனா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்