நடிப்பில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று ஒரு பக்கம் தகவல்கள் வெளியாக, மறுபக்கம் சாய் பல்லவி அடுத்து நடிக்கும் படங்கள் குறித்து அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.
ராம்சரண் நாயகனாக நடிக்கவுள்ள படத்தை இயக்க உள்ளார் புச்சி பாபு. இவர் இதற்கு முன்பு ‘உப்பென்னா’ தெலுங்கு படத்தை இயக்கி பிரபலமானவர்.
சங்கர் இயக்கத்தில் நடித்து வரும் ‘கேம் சேஞ்சர்’ படம் வெளியான கையோடு புச்சிபாபு இயக்கத்தில் நடிக்க உள்ளாராம் ராம்சரண். இந்த படத்தில்தான் சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்தி, தெலுங்கு நாயகிகள் சிலரைப் பரிசீலித்த பிறகு இறுதியாக சாய் பல்லவியை அணுகி உள்ளனர்.
தொடக்கத்தில் புதுப் படங்களை ஏற்பதில்லை என்று கூறி நடிக்க மறுத்துள்ளார் சாய் பல்லவி. எனினும், கதையை விவரித்த பிறகு கால்ஷீட் ஒதுக்கினாராம்.
இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

