நடிகர் அருண் விஜய் ஞாயிற்றுக்கிழமை காலை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
அருண் விஜய் தனது 46வது பிறந்தநாளை உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் அ ஆதரவற்றோருக்கு உணவு பரிமாறி கொண்டாடினார். அத்துடன் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய இரத்ததான முகாமிலும் கலந்துகொண்டு அவரும் இரத்த தானம் செய்தார்.
நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், இரத்த தானம் செய்யும் இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.