திரிஷா விவகாரம்: மௌனம் சாதிக்கும் விஜய்

‘லியோ’ படத்தில் நடித்திருந்த திரிஷா பற்றி அந்தப் படத்தில் நடித்த மன்சூர் அலிகான் தவறாக பேசியதாக காணொளி பரவியதைத் தொடர்ந்து பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் மன்சூர் அலிகான் அண்மையில் பேசிய காணொளியில், “திரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அவருடன் ஒரு படுக்கையறை சம்பந்தப்பட்ட காட்சி இருக்கும். குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டதுபோல் அவரையும் தூக்கிப் போடலாம் என்று நினைத்தேன்.

“இத்தனை ஆண்டுகளில் திரையில் நான் பண்ணாத அட்டூழியமா. ஆனால் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. அப்போது திரிஷாவைக் கண்ணிலேயேக் காட்டவில்லை,” என்று பேசியிருந்தது சர்ச்சையைக் ஏற்படுத்தி இருக்கிறது.

அதற்கு பதிலடி கொடுத்த திரிஷா, “மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய காணொளியைப் பார்த்தேன். அவரது பேச்சினை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது. அவருடன் சேர்ந்து இனி நடிக்கமாட்டேன். அவர் மனித குலத்துக்கே இழுக்கு,” என காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.

இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், குஷ்பு, திரைப் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

திரிஷாவிற்கு ஆதரவாக திரையுலகினர் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தனது கருத்து தவறான முறையில் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் வேற வேலை இருந்தால் போய் பாருங்கள் என்று அலட்சியமாக மன்சூர் அலிகான் பதிலளித்திருந்தார். அந்த அலட்சியப் போக்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “திரைத்துறையில் பெண்கள் நுழைவதும் சாதிப்பதும் இன்னும் சவாலாகவே இருக்கும் இன்றைய சூழலில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகளை பற்றி இப்படி மோசமான கருத்துகளைத் தெரிவித்தது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் பக்கம் நிற்கும்.

“எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மையான மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம். இல்லையென்றால் நடிகர் சங்கத்தில் இருந்து அவர் விலக்கப்படுவார்,” என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

இந்தச் செய்தி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் படத்தின் நாயகன் விஜய் இதுபற்றி எதுவும் பேசாது அமைதி காப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்நிலையில் அந்தணன் என்ற பத்திரிக்கையாளர், “விஜய் ஏன் மௌனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. தான் அடுத்த எம்ஜிஆர் என்று விஜய் நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் தன்னுடன் நடித்த நடிகைகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் எம்ஜிஆர் இப்படி அமைதியாக இருக்கமாட்டார். இருந்ததுமில்லை.

“அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது சேலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் ஏறினார். அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்தபோது சேலம் மாவட்ட செயலாளர் தவறான நோக்கத்தில் ஜெயலலிதாவை தொட்டார். அதனை ஜெயலலிதா உணர்ந்துகொண்டு சென்னைக்கு வந்து எம்ஜிஆரிடம் முறையிட்டார். உடனே எம்.ஜி.ஆர். என்ன செய்தார் என்று பலருக்கும் தெரியும்.

“விஜய் அப்படியெல்லாம் செய்யவேண்டியது இல்லை. மாறாக ஒரு கண்டன அறிக்கையை வெளியிடலாம். அப்படி அவர் வெளியிடும் பட்சத்தில் மன்சூர் மட்டுமின்றி அவர் போன்று எண்ணத்தில் இருக்கும் பலரும் இப்படி பேசினால் விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று பயப்படுவார்கள்.

“முக்கியமாக அப்படி பேசினால் விஜய் என்ற முன்னணி நாயகன் குரல் கொடுப்பார் என்ற எண்ணமும் வரும். அதனால் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது குறையும்,” என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் சூடு பிடித்திருக்கும் இந்நிலையில் நடிகர் ஷாம் கூறியிருப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.

“12 பி படத்தில் நான் நாயகனாக அறிமுகமானேன். அதுபற்றி நடிகர் விஜய்யிடம் கூறினேன். அதற்கு ‘டேய் யாரு டா நீ? முதல் படத்திலேயே ஜோதிகா, சிம்ரன்னு இரண்டு குதிரைகளோட வர’ என்று விஜய் பேசினார். விஜய் பேசியது மட்டும் சரியா?” என்று ஷாம் வெளியிட்டிருக்கும் காணொளி தற்பொழுது தீயாய் பரவி, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!