4 படங்களைத் தயாரிக்கும் அட்லி

1 mins read
30080d70-4fdf-4878-84f6-38848f0ab833
படம்: - சமூக ஊடகம்

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ‘ஜவான்’ பட வெற்றிக்குப் பிறகு, விஜய் நடிக்கும் படத்தை அட்லி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின.

ஆனால், ஷாருக்கான், விஜய் இணைந்து நடிக்கும் படத்துக்கான கதையை உருவாக்கி வருவதாகவும் எனது அடுத்தப் படமாக அது இருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் சில கதாநாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது ‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனம் மூலம் நான்கு படங்களைத் தயாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி நடிப்பில் ‘தெறி’ படத்தை இந்தியில் தயாரித்து வருகிறார். இதை காளீஸ் இயக்குகிறார்.

இதையடுத்து தமிழில் 2 படங்களையும் தெலுங்கில் ஒரு படத்தையும் தயாரிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தப் படங்களை யார் இயக்கப் போகிறார்கள் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்