வெளியாகவுள்ள தனு‌ஷின் ‘கில்லர் கில்லர்’ பாடல்

வெளியாகவுள்ள தனு‌ஷின் ‘கில்லர் கில்லர்’ பாடல்

1 mins read
788f5ed7-89dc-4bc8-8cc8-938a79c8c9f2
படம்: - ஊடகம்

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ புதன்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக இப்படத்தில் நடித்து வந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்