38 மொழிகளில் கங்குவா

38 மொழிகளில் கங்குவா

1 mins read
bc050abd-25a1-48e3-8ff9-120b8f62a863
படம்: - சமூக ஊடகம்

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.

திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ‘கங்குவா’ வரலாறு கலந்து பிரம்மாண்டமான படமாக உருவாகி வருகிறது.

தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

“கங்குவா திரைப்படம் உலகளவில் 38 மொழிகளில் வெளியாகும். மேலும், ஐமேக்ஸ், 3டி முறையிலும் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட முடிவு செய்துள்ளோம். நாங்கள் திட்டமிட்டபடி சரியான பாதையில் போனால் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பல்வேறு புதிய கதவுகள் திறக்கும்,” என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்