மீண்டும் கதாநாயகி இல்லாமல் நடிக்கும் கார்த்தி

மீண்டும் கதாநாயகி இல்லாமல் நடிக்கும் கார்த்தி

1 mins read
3cd5ca3b-1a3d-4205-b061-71cd82f624ee
ஏற்கனவே கைதி படத்தில் கதாநாயகி கதாபாத்திரம் இல்லாமல் கார்த்தி நடித்திருந்தார். - படம்: ஊடகம்

கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு ‛ஜப்பான்’ படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

அதன்பின்னர் ‘96’ பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் தனது 27வது படத்திலும் நடிக்கிறார். இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த வாரத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் தொடங்கியது .

இந்நிலையில் அப்படத்தில் கதாநாயகி கதாபாத்திரம் கிடையாதாம். இதில் கார்த்தி, அரவிந்த்சாமி இருவரை சுற்றி நடைபெறும் குடும்பக் கதை தான் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கைதி படத்தில் கதாநாயகி கதாபாத்திரம் இல்லாமல் கார்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படம் கார்த்திக்கு மாபெரும் வெற்றியைத் தேடி தந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்