நவம்பர் 23ஆம் தேதி ‘அனிமல்’ படத்தின் முன்னோட்டம்

1 mins read
81c64ff9-6f79-429c-9272-95cabf6a31e2
படம்: - ஊடகம்

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது ‘அர்ஜுன் ரெட்டி’, ‘கபீர் சிங்’ போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ‘அனிமல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், அனில் கபூர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படம் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் நவம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமூக ஊடகங்கள் வழி அறிவித்துள்ளது. 

அண்மை காலமாக பாலிவுட் நடிகர்களும் தென் இந்தியாவில் பிரபலமாகும் நோக்கில் தென்னிந்திய மொழிகளில் படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்