திரிஷா பற்றி நான் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் என்னைப் பலிகடா ஆக்கப் பார்க்கிறார்கள்.
திரிஷா பற்றி அண்மையில் தவறாக பேசியதாக மன்சூர் அலிகான் மீது பல திரைப்பிரபலங்கள், நடிகர் சங்கம் ஆகியோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “கதாயநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது குறித்துதான் பேசினேன். நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறை செய்துள்ளது. நான் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்பது அவர்களுக்கு தெரியும். என்னிடம் கேள்வி எதையும் நடிகர் சங்கம் கேட்கவில்லை. போனிலும் பேசவில்லை. நோட்டீஸ் அனுப்பி இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுங்கள் என்று கேட்கவில்லை.
“ஒரு சங்கம் நடத்துகிறவர்கள் இப்படி செய்யலாமா? நான்கு மணி நேரம் நடிகர் சங்கத்திற்கு நான் நேரம் கொடுக்கிறேன். நான் மன்னிப்பு கேட்பவன் இல்லை. நடிகர் சங்கம் மிகப்பெரிய இமாலய தவறைச் செய்துள்ளது.
“நான் அமைதி காத்துக் கொண்டு இருக்கிறேன். எரிமலையாக குமுறினேன் என்றால் எல்லாரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிப் போய்விடுவார்கள்.
“என்னைப் பலிகடா ஆக்கிவிட்டு நல்ல பெயரை எடுக்க பார்க்கிறீர்களா? இது என்ன நியாயம். நடிகர் சங்கம் என ஒரு சங்கம் இருந்தால் குறைந்தபட்சம் விளக்கம் கேட்க வேண்டாமா?
“மக்களுக்கு என்னைப்பற்றி தெரியும். நான் யார் என்பது அவர்களுக்கு தெரியும். பொண்ணு, மாப்பிள்ளை மாதிரி எல்லா செய்தித்தாளும் எங்களுடைய படங்களைப் போட்டு இருக்கிறார்கள்.
“அந்த அம்மாவைவிட (திரிஷா) நான் நன்றாகத்தான் படங்களில் இருக்கிறேன். இந்த பிரச்சினை ஹாலிவுட் வரைக்கும் போய்விட்டது.
தொடர்புடைய செய்திகள்
“அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். நடிகர் சங்கம் விசாரணை செய்யாமல் செய்தது இமாலய தவறு. சினிமாவில் கொலை செய்கிறார்கள் என்றால் நிஜமாகவா கொலை செய்கிறார்கள்? சினிமாவில் பலாத்காரம் என்றால் நிஜமாக செய்வதா? அறிவு இருக்கிறதா? சங்கத்திற்கு அறிவு இல்லையா? தமிழ்நாடே என் பக்கம் உள்ளது.
“இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். எந்த ஆணையமும் வரட்டும். அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. நான் கலைஞர்களை இழுக்காக பேசுகிறவன் அல்ல. அனைவரையும் அரவணைத்து செல்லக் கூடியவன்.
“திரிஷாவை நான் பாராட்டி பேசியதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். திரிஷா குறித்து நான் தவறாகப் பேசவே இல்லை,” என்றார்.

