இளையராஜா: மனநிறைவோடு பதவியில் இருந்து விலகுங்கள்

இளையராஜா: மனநிறைவோடு பதவியில் இருந்து விலகுங்கள்

1 mins read
98bb50d2-b2b9-4ea0-8768-f0ffbca1d830
இசையமைப்பாளர்கள் தினா, இளையராஜா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இசையமைப்பாளர் சங்கத்தின் தலைவர் தினாவை மனநிறைவோடு பதவியை விட்டு விலகு. மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடு என்ற இளையராஜா பேசி இருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இசையமைப்பாளர் தினா உள்ளார். விரைவில் இந்த சங்கத்திற்கு தேர்தல் வரவுள்ளது. இதில் மூன்றாவது முறையாக தினா போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது.

அதற்கு இசையமைப்பாளர் இளையராஜா, “நிறைய முறைகேடு நடந்திருக்கறது என்று கேள்விப்பட்டேன். அதுபற்றி எனக்கு கவலையில்லை.

“இரண்டு முறை நீ நல்லது செய்திருக்கிறேன் என்று கூறினால் அந்த மனநிறைவோடு தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கவேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு தினா, “ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு தேர்தலில் நிற்கலாம்.

“அதை உங்களை நேரில் பார்த்து பேசி புரியவைக்கிறேன்,” என்று பதில் விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி