‘மார்க் ஆண்டனி’யால் வந்த வாய்ப்பு

‘மார்க் ஆண்டனி’யால் வந்த வாய்ப்பு

1 mins read
42bc3a37-4d26-4172-8292-145b20751a96
அஜித், ஆதிக் ரவிச்சந்திரன். - படம்: ஊடகம்

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திற்குப் பிறகு அவரை இயக்க இருப்பது இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இவருடைய இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவருக்கு அஜித்தை வைத்து ‘ஏகே 63’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

இப்படத்தினை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழும் மைத்ரின் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிறுவனம் ஏற்கெனவே ‘புஷ்பா’ ஒன்று மற்றும் இரண்டாம் பாகம், ‘குஷி’ போன்ற பான் இந்திய வெளியீடுகளான பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் முதல் நேரடி தமிழ்ப் படமாக ‘ஏகே 63’ இருக்கப் போவதாக கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலால் அஜித் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்