‘கான்ஜூரிங் கண்ணப்பன்’

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’

1 mins read
97a85126-92ba-45dc-8ea6-ba306ec91ba6
சதீஷ். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

செல்வின் ராஜ் இயக்கத்தில் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ என்கிற நகைச்சுவைக் கலந்த பேய்ப் படத்தில் சதீஷ், ரெஜினா இருவரும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், விடிவி.கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தணிக்கையில் இந்தப் படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது என படக்குழுவினர் புதிய சுவரொட்டி வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்