தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

21 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்த நண்பர்கள்

1 mins read
8ad55429-7912-426f-8512-870234becd82
கமல் ஹாசன், ரஜினிகாந்த். - படம்: ஊடகம்

அருகருகே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரின் படப்பிடிப்பு நடந்ததால் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.

தமிழ்த் திரையின் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். தற்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தனது 171வது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் ஓர் அரங்கத்தில் நடந்து வருகிறது.

இதன் அருகே மற்றொரு அரங்கில் சங்கர் இயக்கத்தில் கமலின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பும் நடக்கிறது.

அருகருகே படப்பிடிப்பு நடப்பதை அறிந்த இருவரும் சந்தித்து பேசினர். கமல், ரஜினி வெளி இடங்களில் பலமுறை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் 21 ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் சந்தித்துள்ளனர்.

இருவரும் “எத்தனை நாளாச்சு?” என தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுதொடர்பான காணொளி ஒன்று இணையத் தளத்தில் பரவி வருகிறது. முன்னதாக ‘பாபா’, ‘பஞ்சதந்திரம்’ படங்களின் படப்பிடிப்பு இதே இடத்தில் நடைபெற்றபோது இருவரும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்