சீனு ராமசாமி என்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்: மனிஷா

சீனு ராமசாமி என்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்: மனிஷா

படம்: ஊடகம்

25 Nov 2023 - 7:52 am

1 mins read

‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தில் நடித்தபோது நடிகை மனீஷா யாதவுக்கு அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக அண்மையில் தகவல் வெளியானது.

இதை சீனு ராமசாமி மறுத்திருந்தார். அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மனீஷா தமக்கு நன்றி தெரிவிக்கும் காணொளியையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், நாகரிகம் கருதி மட்டுமே விழா மேடையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததாக மனீஷா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“மீண்டும் வாய்ப்பு இருந்தால் நான் அவரது படத்தில் நடிப்பேன் என்று சீனு ராமசாமி கூறியுள்ளார். அவர் சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்டார். அப்படிப்பட்ட ஒருவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை,” என்று மனீஷா யாதவ் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
பாலியல்தொல்லை

தொடர்புடைய செய்திகள்