சின்னத்திரையில் நாயகன் ஆகும் கணேஷ் வெங்கட்ராமன்

சின்னத்திரையில் நாயகன் ஆகும் கணேஷ் வெங்கட்ராமன்

1 mins read
fe850d04-1f42-4d92-a27f-c24fc440c151
கணேஷ் வெங்கட்ராமன். - படம்: ஊடகம்

திரைப்பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதை அடுத்து தொலைக்காட்சி தொடரில் நடிக்க முடிவு செய்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன்.

‘அபியும் நானும்’, ‘உன்னை போல் ஒருவன்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றிlப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிக விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘நினைத்தேன் வந்தாய்’ என்ற தொடரில் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளாராம் கணேஷ் வெங்கட்ராமன்.

மாறுபட்ட கதைக்களம் என்பதாலும் தனக்கு ஏற்ற கதாபாத்திரம் என்பதாலும் இத்தொடரில் நடிக்க கணேஷ் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், மிக விரைவில் இப்புதிய தொடர் குறித்த குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகும் என சமூக ஊடகங்களில் ஒரு தகவல் உலா வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்