‘அன்பு, உழைப்பு, நம்பிக்கையே கைகொடுக்கும்’

1 mins read
9861e5f7-b5ef-4e59-a46e-82ff95498148
‘சூரகன்’ படக்குழுவினர். - படம்: ஊடகம்

‘சூரகன்’ என்ற தலைப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடித்துள்ளார் கார்த்திகேயன்.

சதீஷ் கீதாகுமார் இயக்கியுள்ளார். சுபிக்‌ஷா கிருஷ்ணன், வின்சென்ட் அசோகன், நிழல்கள் ரவி, மன்சூர் அலிகான், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அண்மையில் இப்படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியானது.

இந்நிகழ்வில் பேசிய நாயகன் கார்த்திகேயன் தன்னுடன் இணைந்து பணியாற்றிய எல்லாரும் தங்கள் சொந்தபடம் போல் நினைத்து உழைத்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

பணத்தை மட்டும் வைத்து அனைத்தையும் சாதித்து விட முடியாது என்றும், அன்பு, உழைப்பு, நம்பிக்கை ஆகியவற்றை கொண்டுதான் எதையும் சாதிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த படக் குழுவிடம் நான் எதிர்பார்த்த இந்த அம்சங்கள் இருந்தன. அதனால் நான் நினைத்ததை விட சிறப்பான படைப்பை உருவாக்க முடிந்தது.

“தற்காலிக பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகும் காவல் துறை அதிகாரி ஒருவர் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு பெண்ணைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

“அதனால் அவருக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை. இந்தப் படத்தை புதியவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளோம். எனினும் தரத்தில் குறை வைக்கவில்லை,” என்கிறார் கார்த்திகேயன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்